Miracles admin  

How Our Bhagawan Surprised A Devotee From Europe

யோகிராம் சுரத்குமார் ஐரோப்பியவை சேர்ந்த நண்பர் சந்நிதி தெரு வீட்டில் சுவாமி யோகி ராம்சுரத்குமார் எதிரில் அமர்ந்திருந்தார். அவர் தன் சக நாட்டு நண்பர் மூலமாக சுவாமியைப் பற்றி அறிந்திருந்தார்.

அவரின் நண்பர் சுவாமியைத் தனது குருவாகப் பாவித்து எப்போதும் சுவாமியின் ஸ்மரணையிலேயே இருந்து வந்தார். சுவாமியைப் பற்றியே அனைவரிடமும், எப்போதும் பேசிவந்தார். நண்பருக்கு அது பிடிக்கவில்லை.

அவரிடம் சுவாமியின் தெய்வீகத் தன்மையும், ஆரவாரமற்ற சகஜ புனித நிலையும், தோற்றமும், அவரது அழுக்கேறிய கருப்பான ஆடையும், விடாது சிகரெட் புகைக்கும் பழக்கமும், சந்நிதி தெரு வீட்டின் ஒழுங்கற்ற காட்சியும் நண்பரால், சொல்லப்பட்டது.

கல்கத்தா ஸ்ரீ அனந்தமயிமாவின் சீடரான அவருக்கு நண்பரின் சுவாமி அனுபவத்தைக் கேட்ட பின்னும் சுவாமியின் மீது நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தவில்லை.

இருப்பினும் சுவாமியை அந்த நண்பர் சோதிக்க விரும்பினார். எனவே ஒரு நாள் தனது நாட்டில் இருந்து நேராக திருவண்ணாமலை வந்தார். சுவாமியின் சந்நிதித் தெரு வீட்டுக்கு வந்தார். இரும்புக் கதவைத் தட்டினார். சுவாமியே வெளியில் வந்து, கதவைத் திறந்து அவரை உள்ளே அழைத்துச் சென்று தன் எதிரே அமரவைத்தார்.

“சுவாமி தாங்கள் எனக்கு மந்திர தீட்சை அளித்தருளுங்கள்.”

நண்பர் பணிவோடு சுவாமியிடம் வேண்டினார்.அவரின் பொய்யான பணிவு அவரது வார்த்தைகளில் தெரிந்தது.
சுவாமி வெகு நேரம் பதில் கூறவில்லை. அமைதியாகத் தொடர்ந்து சிகரெட் புகைத்த வண்ணம் இருந்தார். அந்த ஐரோப்பிய நண்பரை வெகு நேரம் தீர்க்கமாகப் பார்த்தபடி புகைத்துக் கொண்டே இருந்தார்.

சுவாமியின் பார்வையின் தீட்சண்யம் நண்பரை ஏதோ செய்தது. அவர் ஏதோ சொல்ல எத்தனித்தார்.

சுவாமி மெதுவாக எழுந்து நண்பர் எதிரே நின்றார்.

“நண்பா கல்கத்தா அனந்தமயிமாவிடம் உனது பிரார்த்தனையை மீண்டும் சமர்ப்பிக்கலாமே?”

ஐரோப்பிய நண்பருக்கு வியர்த்து விறுவிறுத்துப் போனது. கண்கள் கலங்கின. சுவாமி சிரித்தபடி நண்பர் எதிரே நின்றார். நண்பர் சுவாமியின் திருவடியில் வீழ்ந்தார்.

“சுவாமி நான் ஏற்கனவே அனந்தமயிமாவிடம் தீட்சை பெற்றவன். தங்களைச் சோதிக்கவே இவ்வாறு செய்துவிட்டேன் சுவாமி. என்னை மன்னித்து விடுங்கள் சுவாமி.” நண்பர் கதறினார்.

“நண்பா சாதுக்களையும், சந்நியாசிகளையும் மற்றும் என்தந்தையின் பக்தர்களையும் நமஸ்கரித்துக் கொள். ஆனால் உன் நம்பிக்கை முழுமையாக உன் குரு மீது இருக்கட்டும். வேடிக்கையாகக்கூட உன் குருவை குறைத்து மதிப்பிடாதே நண்பா. அவர் அனைத்தும் அறிவார். தந்தையை நோக்கி செல்லும் பயணம் உனது குருவின் அருளால்தான் முழுமையடையும். உனது குருவை நம்புவாய் நண்பா. உனது குருவே உனக்கு சகலமுமாகும்.”

நண்பர் சுவாமியை மீண்டும் நமஸ்கரித்தார். சுவாமி அவருக்குச் சில பழங்களைப் பிரசாதமாகக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

யோகி ராமசுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா.

Courtesy – Sivakasi Yogiram Suratkumar Whatsapp Group

Leave A Comment