Miracles admin  

Quotes of Bhagawan Yogi Ramsuratkumar

  • கடவுள் ஒருவனை எந்தச் சூழ்நிலையில் வைத்தாலும், அதை மனமார ஏற்றுக்கொள்வதோடு, அந்த நிலைக்காக கடவுளிடம் நன்றியோடு நடந்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அதுவும் கடவுளின் ஆசிர்வாதமே.
  • குருவின் மேல் யாருக்கு அதிக நம்பிக்கை இருக்கிறதோ, அவர்களை விதியின் விளையாட்டு பாதிக்காது.
  • குருவுக்கு மேலானவர் எவருமில்லை. குருவே பரப்பிரம்மம். குருவே பரம்பொருள். குருவே சிவன். குருவே தெய்வம். குருவே பந்தம். குருவே உயிர். குருவிற்கு நிகராக எதுவுமில்லை. குரு ரூபமானவர். பரிபூரணமாக திகழ்பவர். எங்கும் இருப்பவர்.
  • என் தந்தை ஒருவரே நிலையானவர். நிரந்தரமாய், அனைத்துமாய், எங்கும் என்றும் எதிலுமாய் அவரே இருக்கிறார். வேறு யாருமில்லை. எதுவுமில்லை.
  • “யோகி ராம்சுரத்குமார்” என்ற நாமத்தை ஒருமுறையேனும் தன் வாழ்வில் உச்சரிப்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள் !
  • தெய்வீக உணர்வு என்னவென்று அறியாத பாமரர் கூட அருணை ஆசிரமத்திற்குள் நுழைந்தவுடன் சட்டென்று தெய்வீகத்தை உணரும் படியாக என் தந்தை இந்த ஆசிரமத்தை நிர்மாணித்துள்ளார் !
  • ஒரு பெரிய மகானுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைப்பது மிக மிக அரிது. அந்தச் சேவையும் அவருக்கு மகிழ்ச்சியும், திருப்தியும் ஏற்படும்படி செய்வது ஒன்றே நன்மை பயக்கும். இதுவே கடவுளை அடைவதற்கு சிறந்த சாதனை அப்படிப்பட்டவர்க்கு இறைவன் உரிய நேரத்தில் உயர்ந்த அனுபவங்களை அளிப்பார் !
  • கடவுளின் மேல் ஒருமுகப்பட்ட மனது எப்பொழுது வரும் ? “நீ காண்பவை எல்லாவற்றிலும் அவர் மட்டுமே இருக்கிறார். அவரே எல்லாவற்றையும் இயக்குகிறார்” என்று சதா நினைவில் கொண்டு வந்தால் மட்டுமே !
  • நாமத்தைச் சொல்லிக் கொண்டிருந்தால் அது உன் கவலையையும், வேதனையையும் அகற்றி விடும் !
  • இந்தப் பிச்சைக்காரனின் நாமம் ஒவ்வொன்றும் அதைச் சொல்பவர் மட்டுமன்றி, இந்தப் பிச்சைக்காரன், இவன் தந்தையின் பணி, ஏன் இந்த உலகம் முழுவதற்குமே உதவும் !

பகவான் யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெய குரு ராயா !

Source – https://www.youtube.com/@yogiramsuratkumarthegodchi1181/community

Leave A Comment