சுவாமி யோகி ராம்சுரத்குமாரின் சந்நிதித் தெரு வீட்டின் கூடத்தில், பல சமயங்களில் பகலில் கூட விளக்கின் வெளிச்சம் தேவைப்படும்.
சுவாமி யோகி ராம்சுரத்குமாரின் சந்நிதித் தெரு வீட்டின் கூடத்தில், பல சமயங்களில் பகலில் கூட விளக்கின் வெளிச்சம் தேவைப்படும்.
சுவாமியின் இருக்கைக்கு நேர் மேலே விட்டத்தில், எதிரில் இருக்கும் சுவரை நோக்கி ஒரு குழல் விளக்கு பொருத்தப்பட்டிருக்கும்.
அதற்கு நேர் எதிரே சுவரில் ஒரு குழல் விளக்கு பொருத்தப்பட்டிருக்கும்.
சுவாமி தன்னைத் தரிசிக்க வந்திருக்கும் அன்பரை நன்கு பார்க்க விரும்பினால் தன் இருக்கைக்கு மேல் உள்ள குழல் விளக்கை எரிய விடுவார். விளக்கின் வெளிச்சம் வந்திருக்கும் பக்தரைப் பளிச்செனக் காட்டும். ஆனால்
அன்பருக்கோ சுவாமி தன்னைப் பார்ப்பது தெரியாது.
சுவாமி அன்பருக்கு விடை கொடுத்து அனுப்பும்போது,
“நண்பா உன்னை இந்த பிச்சைக்காரன் நன்கு பார்த்துவிட்டான். உன்னை என் தந்தை ஆசீர்வதிக்கிறார்,” என்று கூறி அனுப்பி வைப்பார்.
சுவாமி, வந்திருக்கும் நண்பர் சுவாமியின் திருவுருவை நன்கு பார்த்து மனதில் நிலைபெறச் செய்ய வேண்டுமென விரும்பினால், சுவாமியின் எதிரில் உள்ள சுவரில் பொருத்தியிருக்கும் குழல் விளக்கை சுவாமி எரிய விடுவார்.
அந்த விளக்கின் வெளிச்சத்தில் சுவாமியின் திருமேனி பளீரென ஜொலித்து பார்ப்பவரின் மனதில் நீங்கா இடம் பெற்றுவிடும்.
இந்த பாக்கியம் எல்லாருக்கும் கிட்டாது. குறிப்பிட்ட சில ஆன்மீக சாதகருக்கு மட்டுமே இத்தகைய பாக்கியத்தை சுவாமி அருளுவார். அதுவும் இச்செயல் மிக அபூர்வமாகவே நடைபெறும்.
சுவாமி இத்தகைய அருளாளருக்கு கூறுவார்,
“நண்பா இந்த பிச்சைக்காரனை நன்கு பார்த்துக்கொள். மனதில் இருத்திக் கொள். அதுவே உனக்கு தியானமாகும்.”
சுவாமி இது போன்ற பற்பல வழிமுறைகளைக் கையாள்வார். அவை யாவும் அற்புதமானவை. மிகவும் நுணுக்கமானவை. அந்த வழிமுறைகளை ஒருவர் அறிந்து கொண்டாலே போதும், சுவாமியின் பேரருள் எங்ஙனம் அன்பர்களுக்குச் செலுத்தப்படுகிறது என்பதை ஓரளவிற்கு புரிந்து கொள்ளலாம்.
யோகி ராம்சுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா.
Source – https://www.facebook.com/parthasarathy.sannasi