டிசம்பர் 1 பகவான் யோகிராம்சுரத்குமார் மஹராஜ் யின் ஜெயந்தி விழா
டிசம்பர் 1 விசிறி சித்தனை கொண்டாடு உன்வாழ்வில் பல அதிசியங்களை காண்பாய் இது சத்தியம்.
உனது எண்ணங்கள் அனைத்தும் தவறாக நடக்கிறதே என்ன செய்வது என்று யோசிக்காதே, அனைத்தும் மாறும். எதிலும் நிதானமாக யோசித்து செயல்படு. அவசரப்படாதே, நிச்சயம் வெற்றி கிட்டும். இதற்கு ஒரே வழி நாமஜெபம்மே
உன் வாழ்க்கையில் நடக்கின்ற யாவும் உன் கர்மவினைகளின் படி நடப்பவையே. அப்படி இருக்கையில் நீ துயரங்களை எதிர் கொண்டு தான் ஆக வேண்டும். என்னை நினைத்து நாமஜெபம் செய்தால் என் தந்தை உன்னிடம் இருப்பார் உனக்கு வலிக்காமல் பார்த்துகொள்வார்
உன் கர்ம பந்தத்திலிருந்து விரைந்து விடுபட உன்னால் முடிந்த அளவு நாமஜெபத்துடன் பிறருக்கு நீ நன்மை செய். உன்னிடம் உதவிக்கு வருபவர்களை முடிந்தவரை உதாசீனப்படுத்தாதே,
உன்னால் முடிந்த உதவியை நீ நாமஜெபத்துடன் அவர்களுக்கு செய். அத்தர்மம்மான காலத்தில் நீ ஜெபித்த நாமஜெபம் இக்கட்டான சூழ்நி லையில் இருந்து உன்னைக் காக்கும். வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் அவரவர் வினையின் வகையில் மாறுபடும்.
மற்றவர்கள் எல்லாம் நிம்மதியாக சந்தோஷத்துடனும் வாழ்வதாகவும், நீ மட்டுமே துயரங்களை எதிர்கொள்வதாகவும் புலம்புகிறாய்.
உண்மை அது அல்ல, அவரவர் வாழ்க்கையின் உள்ளே சென்று பார்த்தால் தான் என்னென்ன துயரங்களை அவர்கள் சுமக்கிறார்கள் என்று உனக்கு புரியும்.
பொறுமையையும், நம்பிக்கையையும் எந்த சூழ்நிலையிலும் கைவிடாதே. உன்னை விட்டு யார் விலகினாலும், நாமத்தை விடாதே உன்னோடு நாமவடிவம்மாக என் தந்தை இருப்பார்
நீ மேன்மேலும் வளர்ச்சி அடைந்து வாழ்வாங்கு வாழ்வாய். உனது வாழ்க்கை எல்லா செல்வங்களும் பெற்று மகிழ்ச்சியாக மாறப் போகிறது. இவை அனைத்தையும் உன்னை வந்து சேரும் படி என் தந்தை செய்வார்
யோகிராம் சுரத்குமார்.
Source – Yogi Ramsuratkumar Whatsapp Group – Sivakasi
Image Source – https://www.youtube.com/channel/UCcSxP0y3kCUjaEXcjyGlLMQ/community?lb=Ugkx-QOTFmUVpnWqaO5XzMyThhRgE0rCAE93