நவம்பர் 27. 27 டீக்கள்
1980 ஆண்டு வர இன்னும் இரண்டு வருடங்கள் இருந்தன. பகவானீன் ஜெயந்தி தினமான டிசம்பர் 1 ஆம் தேதி வருவதற்கும் இரண்டு மூன்று நாட்கள் இருந்தன. அதாவது November 27 அல்லது 28 தேதியாக இருக்கலாம்.
சந்நிதி தெரு இல்லத்தில் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. பகவான் ஒரு குறிப்பிட்ட பக்தரைப்பார்த்து எத்தனைபேர் உள்ளனர் என்று கேட்க அந்த பக்தர் அனைவரையும் எண்ணினார். தான் உட்பட மொத்தம் 27 பேர் இருப்பதாக கூறினார். பகவான் புன்னகையோடு அனைவருக்கும் டீ வாங்கி வந்து கொடுப்போம் என்றார். பகவானுக்கு 2 டீ மேலும் பக்தர்களுக்கு 27 டீக்கள் என்று மனதில் நினைத்துக்கொண்டே தன் நண்பருடன் அந்த பக்தர் டீக்கடையை அடைந்து டீ விபரங்களைச்சொன்னார்.
டீ போடுவதற்கு சற்று நேரமாகும் என்பதால் அந்த பக்தர் தன் நண்பருடன் பகவானின் மகிமை குறித்துப்பேசத்தொடங்கினார். டீ போட்டு முடித்து டீ கடைப்பையன் அனைத்து டீகளையும் எடுத்துக்கொண்டு சென்று விட்டான். பக்தர் தொடர்ந்து பகவானின் மகிமையைப்பேசலானார். 10 அல்லது 15 நிமிடம் கடந்திருக்கும். அந்த பக்தர் டீ பற்றிய நினைவு வந்தவுடன் டீக்கடையைப்பார்க்க டீக்கடைக்காரர் டீபோய் 10 நிமிடங்களுக்குமேலாகிவிட்டது என்றார். பக்தரும் அவர் நண்பரும் வேகவேகமாய் சந்நிதி தெரு இல்லத்தை அடைந்தனர். 27 + 2 என 29 டீ டம்ளர்கள் குடிக்கப்படமால் அப்படியே வைக்கப்பட்டிருந்தது. அந்த பக்தர் பயந்தவாறு பகவானைப்பார்த்தார். தன் மனதில் நாம் செய்த விசயத்தால் அனைத்து டீயும் ஆறிப்போயிருக்குமே என்று கவலையோடு பகவானைப்பார்த்தார். பகவான் அந்த பக்தரிடத்தில் அனைவருக்கும் டீக்கொடுப்போம் என்றார். முதல் டீ டம்ளரில் கைவைத்தவுடன் அது சிறிதும் சூடு குறையாமல் டீ போட்டவுடன் எப்படி சூடாக இருக்குமோ அதே சூட்டில் இருப்பதைக்கண்டு ஆச்சிரியமடைந்தவாறே அனைவருக்கும் அந்த டீக்களை கொடுத்து பின்னர் பகவானுக்கு சிரட்டையில் இரண்டு டீ கொடுத்தார். அந்த 27 பக்தர்களும் அந்த சூடான சுவையான டீயை பருகினர்.
பகவான் தன் அருளால் ஏதோ உணர்தவே 27 பக்தர்களுக்கு நவம்பர் மாதத்தில் 27 ஆம்தேதியன்று டீயோடு அருளையும் பொழிந்தார். காரணகாரியங்கள் பகவானே அறிவார்.
இன்றையநாளும் நவம்பர் 27.
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா.
Source – Yogi Ramsuratkumar Whatsapp Group – Sivakasi