யோகியை தரிசிப்பதால்(நாமத்தை ஜெபிப்பதால்) நமக்கு கிடைக்கும் நன்மை..
நாம் முன்செய்த நல்வினை தீயவினையின் படி தான் வாழ்வு நடைபெறுகிறது என்பதால் யோகியை தரிசிப்பதால் மட்டும் அது மாறி விடப் போகிறதா என்ற கேள்வி மனதில் எழும்..
பாவ புண்ணியங்களை மகான்கள் மாற்றுவது இல்லை என்பது உண்மைதான்.
ஆனால் நாம் வினையை அனுபவிக்கும் முறையை மாற்றுகிறார்கள்.
இதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.
ஒருவர் ஆறாயிரம் ரூபாய்க்கு சில்லறை நாணயங்களாக வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் அது ஒரு மூட்டை மாதிரி இருக்கும்..
அதை சுமப்பது கையாள்வது எல்லாமே கஷ்டம்..
அவர் படுகிற பாட்டைப் பார்த்து விட்டு ஒருவர் சில்லறையைத் தாம் வாங்கிக் கொண்டு புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக 3ஐ தருகிறார்..
இப்போதும் அதே ஆறாயிரம் தான் இருக்கிறது. ஆனால் சுமை தெரியவில்லை ..!
பாரம் குறைந்து விட்டது ..!!
இதைத்தான் மகான்கள் (யோகிராம் சுரத்குமார்) செய்கிறார்கள்…!!
கர்மவினை நம்மிடம் தான் உள்ளது அனால் நாம் கஷ்டப்படாத படி நம் மனோ நிலையை யோகி மாற்றி நமது ஆத்ம சக்தியை பலப் படுத்தி விடுகிறார்கள்..
வினைகழிந்த(யோகிராம் சுரத்குமார்) மகான்களை வணங்க நமது பாவ வினையை ஏற்றுக்கொள்ளும் வகையில் மாறும் என்பது அசைக்க முடியாத உண்மை..
🖕
யோகியைவணங்கி நாமத்தை இடைவிடாது ஜெபிக்க இன்றும் இது நிகழ்கிறது …!
ஆகவே எப்பொழுதும் யோகியின் நாமத்தை ஜெபித்து வழி படுங்கள். உங்கள் துன்பங்கள் கண்டிப்பாக குறையும்..
இந்த உலகியலில் எத்தனையோ சித்தர்கள், ஞானிகள், மகான்கள் அவதரித்துக் கொண்டே இருக்கின்றார்கள்.
பிரபஞ்ச இயக்க (பரம்பொருளால்) ஆற்றலால் சிலர் ஆட்கொள்ளப்பட்டு யோகிகளாக இருக்கின்றார்கள்!
நீங்களும் சித்தத்தை அடையவே இங்கு பிறந்துள்ளீர்கள் என்பதே உண்மை.
ஆன்ம ஞானத்தை அடைய சத்குரு வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்”*
யோகியின் நாமத்தில் அனைத்து மந்திரமும் அடக்கம் இது சத்தியம்
நாமம் சொல்வோம் மற்றவரையும் சொல்ல வைப்போம்
Source – Yogi Ramsurat Kumar Whatsapp Group Sivakasi
Image source – https://www.youtube.com/channel/UCcSxP0y3kCUjaEXcjyGlLMQ/community?lb=UgkxqtqjCAOe3bv_2Tuz4XLhHwbizCdpvB3g